

சென்னை: சென்னையில் இன்று (நவ.14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்தது. இது நகை வாங்க முடியாமல் திணறிவந்த நடுத்தரவர்க்க மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6935-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.55,480-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 வாரங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,160 வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு முந்தைய தினமான அக்.30-ம் தேதி பவுன் ரூ.59,520-க்கும் அதிகரித்து வரலாற்று உச்சத்தை எட்டியது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.55,480-க்கு விற்பனையாகிறது.