சென்னையில் 2 நாள் நடக்கிறது சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை!

சென்னையில் 2 நாள் நடக்கிறது சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை!
Updated on
1 min read

சென்னை: ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இயற்கை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த மாதத்துக்கான இயற்கை சந்தை நேற்று தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகள், துணிப்பைகள், சணல் பொருட்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், எண்ணெய் வகைகள், ஊறுகாய் வகைகள், செடிகள், விதைகள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்றவை இடம்பெற உள்ளன.

இவற்றுடன் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்களும் கிடைக்கும். காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த இயற்கை சந்தையில் வாடிக்கையாளர்கள் தேவைப்படும் பொருட்களை வாங்கி செல்லலாம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in