ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று முதல் புதிய கால வரம்பு அமல்

ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று முதல் புதிய கால வரம்பு அமல்
Updated on
1 min read

சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கால வரம்பு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கால வரம்பு இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான இந்த புதிய கால வரம்பு ரயில் மூலம் பயணிக்க திட்டமிடும் பயணிகளுக்கு சரியான வகையில் உதவும் என ரயில்வே அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் பழைய கால வரம்பின் கீழ் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளில் (61 டு 120 நாட்கள்) 21 சதவீதம் ரத்து செய்யப்படுவதாகவும், 5 சதவீத பயணர்கள் பயணிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் பலன் அடைவார்கள் என அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு: கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு எந்தவித மாற்றமும் இல்லை. அவர்கள் 365 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யலாம்.
  • பழைய கால வரம்பின் கீழ் அக்.31 வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் தகுதி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in