

சென்னை: உலோக உதிரிபாக உற்பத்தி நிறுவனமான ஓபிஎஸ்சி பெர்ஃபெக் ஷன், நேற்று பங்குச் சந்தையில் என்எஸ்இ எஸ்எம்இ பிரிவில் பட்டியலானது. இந்நிறுவனத்தின் பங்கு ரூ.110 மதிப்பில் அறிமுகமானது. பட்டியலுக்குப் பிறகு அது ரூ.115.50 ஆக உயர்ந்தது.
ஓபிஎஸ்சி ஐபிஓ மூலம் 66,02,400 பங்குகளை புதிதாக வெளியிட்டது. இதன் மூலம் திரட்டும் நிதியை தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்உற்பத்தித் திறனை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாக் ஷம் லீக்கா கூறுகையில், “பங்குச் சந்தையில் எங்கள் நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொறியியல் துறையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிவாய்ப்பை இது எடுத்துக்காட்டுகிறது” என்றார்.