இந்தோனேசியாவில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை: காரணம் என்ன?

இந்தோனேசியாவில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை: காரணம் என்ன?
Updated on
1 min read

சென்னை: இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு கடந்த வாரம் தடை விதித்தது. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்த தடை காரணமாக அந்நாட்டில் ஆப்பிள் ஐபோன் 16 மாடல்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இந்த சாதனத்தை மக்கள் வாங்கக்கூடாது என அந்நாட்டின் தொழில்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இந்தோனேசியாவில் ஆப்பிள் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதாக அளித்திருந்த வாக்குறுதியை முழுவதுமாக நிறைவேற்றாமல் உள்ளது இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனை தொழில்துறை அமைச்சர் அகஸ் குமிவாங் கர்தசஸ்மிதா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஐபோன் 16 மாடலை அந்நாட்டில் விற்பனை செய்வதற்கான உரிய சான்றிதழ் ஆப்பிளுக்கு கிடைக்கவில்லை.

அதாவது ஆப்பிள் நிறுவனம் இந்தோனேசியா ரூபாய் மதிப்பில் 1.71 டிரில்லியன் முதலீடு செய்வதாக சொல்லி 1.48 டிரில்லியனை தற்போது முதலீடு செய்துள்ளது. அதுதான் தடைக்கு காரணமாக அமைந்துள்ளது. அண்மையில் ஆப்பிள் சிஇஓ டிம் குக், இந்தோனேசியா சென்றிருந்தார். இருப்பினும் அது பலன் தரவில்லை. அங்கு தரப்பட்ட முதலீடு சார்ந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய அழுத்தத்தை ஆப்பிள் எதிர்கொண்டுள்ளது. மேலும், உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் சில ஸ்மார்ட்போன்களில் குறைந்தது 40 சதவீத பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதியும் அங்கு அமலில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in