ரூ. 1,528 கோடி எப்டிஐ திட்டங்களுக்கு அனுமதி

ரூ. 1,528 கோடி எப்டிஐ திட்டங்களுக்கு அனுமதி
Updated on
1 min read

ரூ. 1,528 கோடி மதிப்பிலான 14 நிறுவனங்களின் அந்நிய முதலீட்டுத் திட்டத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் ஏசிஎம்இ சூரிய ஆற்றல் மற்றும் சின்கிளேர் ஹோட்டல்ஸ் நிறுவனத் திட்டங்களும் அடங்கும்.

ஜூலை 4-ம் தேதி நடைபெற்ற எப்ஐபிபி-யின் இயக்குநர் கூட்டத்தில் இத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 6 நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. 7 நிறுவனங்களின் திட்டங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மருந்து தயாரிப்பு நிறுவனமான லாரஸ் லேப்ஸ் ரூ. 600 கோடி, ஏசிஎம்இ ரூ. 275 கோடி, சின்கிளேர் ஹோட்டல்ஸ் ரூ. 41 கோடி, கோல்டன் அக்ரி ரிசோர்சஸ் இந்தியா ரூ. 485 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.எஜிலன்ட் டெக்னாலஜீஸ், கிறிஸ்டைன் கமரமோன் மர்கோடின், ஹெச்எல்ஜி எண்டர்பிரைசஸ், ஜிஸ்டாட் ஹோட்டல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது. எப்ஐபிபி அனுமதி தேவைப்படாத சில நிறுவனங்களும் ஒப்புதல் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in