அக்.28 முதல் தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு ரூ.199, 299-க்கு விற்பனை: அரசு தகவல்

அக்.28 முதல் தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு ரூ.199, 299-க்கு விற்பனை: அரசு தகவல்
Updated on
2 min read

சென்னை: தீபாவளி பண்டிகையைொட்டி, “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு மளிகைப் பொருட்கள் விற்பனை வருகின்ற அக்.28 முதல் நடைபெறவுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று (அக்.26) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பபு: தீபாவளி பண்டிகையினை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்வரின் அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை வருகின்ற அக்.28 முதல் நடைபெறவுள்ளது.

இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு, பிரீமியம் மற்றும் எலைட் என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிரீமியம் தொகுப்பில், துவரம்பருப்பு-200கிராம், உளுத்தம்பருப்பு-200கிராம், கடலைபருப்பு-200கிராம், வறுகடலை (குண்டு) -100கிராம், மிளகு-25கிராம், சீரகம்-25கிராம், வெந்தயம்-50கிராம், கடுகு-50கிராம், சோம்பு-50கிராம், நீட்டு மிளகாய்-100கிராம், தனியா-100கிராம், புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், எலைட் தொகுப்பில், துவரம்பருப்பு-250கிராம், உளுத்தம்பருப்பு-250கிராம், கடலைபருப்பு-250கிராம், வறுகடலை (குண்டு) -200கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம், வெந்தயம்-50கிராம், கடுகு-50கிராம், சோம்பு-50கிராம், நீட்டு மிளகாய்-250கிராம், தனியா-200கிராம், புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

அது மட்டுமல்லாது, தீபாவளி பண்டிகையை தமிழர்கள் அளவுக்கு சிறப்பாக கொண்டாடுபவர்கள் யாவரும் இல்லை. தீபாவளி பண்டிகையில் எவ்வாறு பட்டாசுகள் தனி இடத்தைப் பிடிக்கின்றதோ அதேபோல இனிப்புகளும் முதலிடம் பெறுகின்றன. பொதுவாக தீபாவளியன்று இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது வழக்கம்.
அதற்கேற்றார் போல தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த “அதிரசம்-முறுக்கு காம்போ” தொகுப்பில் பச்சரிசி மாவு-500கிராம், பாகு வெல்லம்-500கிராம், ஏலக்காய்-5கிராம், மைதா மாவு-500கிராம், Sunland/Goldwinner Sunflower Oil -1/2லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.இந்த தொகுப்புகள் அனைத்து வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக தீபாவளி பண்டியைகை கொண்டாடி மகிழ கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in