Published : 12 Jun 2018 09:25 AM
Last Updated : 12 Jun 2018 09:25 AM

இவரை தெரியுமா?: மா ஹுயாடெங்

டென்சென்ட் ஹோல்டிங்ஸ் முதலீடு மற்றும் இணைய சேவைகள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 1998-ம் ஆண்டு முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

சீனா மோஷன் டெலிகாம் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் பேஜர்களுக்கான மென்பொருள் தயாரிப்பவராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.

சீனாவின் ரங்சன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இணைய அழைப்பு சேவைகள் பிரிவில் பணியாற்றியுள்ளார்.

போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்த முதல் சீனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

டைம் பத்திரிகையால் உலகில் அதிக தாக்கம் செலுத்தும் மனிதர்களில் ஒருவர் என குறிப்பிடப்பட்டவர்.

சீன நாடாளுமன்றமான நேஷனல் பீப்பீள் காங்கிரஸின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

சீனாவின் ஷென்சென் பல்கலைகழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x