Published : 22 Jun 2018 07:50 AM
Last Updated : 22 Jun 2018 07:50 AM

இவரை தெரியுமா?- லார்ஸ் மெக்னில்

பிஎன்பி பரிபாஸ் சர்வதேச வங்கி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி. 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்துவருகிறார்.

பிஎன்பி பரிபாஸின் துணை நிறுவனமான போர்டிஸ் வங்கியின் மேலாளராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

பிஎன்பி பரிபாஸ் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் 26 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி அண்ட் கம்பெனியில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

பிராக்டர் அண்ட் கேம்பிள் நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் மேலாளராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.

பெல்ஜியத்தின் கெண்ட் பல்கலைகழகத்தில் பொறியியல் பட்டமும், அணுக்கரு அறிவியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x