Published : 14 Jun 2018 09:28 AM
Last Updated : 14 Jun 2018 09:28 AM

இவரை தெரியுமா?: ஜார்ஜ் எஸ். டேவிஸ்

குவால்காம் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்துவருகிறார்.

நிதி, தகவல் தொடர்பு, முதலீட்டாளர் உறவுகள், உலக அளவிலான புதிய உத்திகள் போன்ற பிரிவுகளை கவனித்து வருகிறார்.

அப்ளைட் மெட்டீரியல்ஸின் மின்னணு தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

அமெரிக்க எண்ணெய் நிறுவனமான அட்லாண்டிக் ரிச்பீல்டின் ஐரோப்பிய பகுதிகளுக்கான துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

வால் ஸ்டீரீட் ஜேர்னல் தலைமை நிதி அதிகாரிகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்துவருகிறார்.

அமெரிக்காவின் கிளேர்மோன்ட் மெக்கென்னா கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டமும், கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மேலாண்மை பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x