வணிகம்
கோடக் எம்என்சி ஃபண்ட் அறிமுகம்
சென்னை: கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், கோடக் எம்என்சி ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டம் அக்.7 முதல் 21 வரையில் மக்களின் முதலீட்டிற்காக திறந்திருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நீலேஷ் ஷா கூறுகையில், “ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பன்னாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே கோடக் பன்னாட்டு நிறுவன நிதியத்தின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
