இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜன் கலக்கும் திட்டம்: அதானி குழுமம் தொடங்கியது

இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜன் கலக்கும் திட்டம்: அதானி குழுமம் தொடங்கியது
Updated on
1 min read

அகமதாபாத்: அதானி டோட்டல் கேஸ் நிறுவனம், இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜனை கலக்கும் மிகப் பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வீடுகளுக்கு மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயுவில் 2.2 -2.3 சதவீதம் அளவில் பசுமை ஹைட்ரஜனை கலந்து வருகிறது. படிப்படியாக இது 8 சதவீதம் வரையில் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை ஹைட்ரஜன் கலக்கப்படுவதால், இயற்கை எரிவாயுவின் செயல்திறன் அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்துக்கு காரணமாக இருக்கும் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாக குறைக்க மத்தியஅரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதானி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் கலப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் கூறுகையில், “இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜனை கலப்பதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். அந்தவகையில் சுத்தமான எரிபொருள் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில், அதானி குழுமத்தின் முக்கியமான நகர்வு இது” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in