எஸ்.கே.ராய் - இவரைத் தெரியுமா?

எஸ்.கே.ராய் - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

$ இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தலைவர். கடந்த வருடம் ஜூன் 29-ல் பொறுப்பேற்றதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

$ 1981-ம் ஆண்டில் நேரடி அலுவலராக எல்.ஐ.சி.யில் இணைந்தார். ஏரியா மேலாளர், மண்டல மேலாளர், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ், நிர்வாக இயக்குநர் என பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்.

$ ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், சட்டப்படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

$ நடப்பு நிதி ஆண்டில் 60,000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

$ இப்போதைக்கு ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை ஆகியவை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் எப்போதும் ஐடி, வங்கி மற்றும் பார்மா பங்குகள் எல்.ஐ.சி. விரும்பி முதலீடு செய்யும் துறைகள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in