டயாடெம் நிறுவனத்தின் அஷிரா சில்க்ஸ் - பண்டிகைக் கால கலெக்‌ஷன் அறிமுகம்

புதிய டயாடெம் ஸ்டோரின் தீபாவளி பண்டிகைக்கால சேலை சேகரிப்புகளை நடிகை கிருத்தி ஷெட்டி, ப்ரியா தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தினர்.
புதிய டயாடெம் ஸ்டோரின் தீபாவளி பண்டிகைக்கால சேலை சேகரிப்புகளை நடிகை கிருத்தி ஷெட்டி, ப்ரியா தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தினர்.
Updated on
1 min read

சென்னை: டயாடெம் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்கும் நிறுவனமாக விளங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை திருப்தியடையச் செய்வதற்கான தேடலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உன்னிப்பான சிந்தனை, கடின உழைப்புக்குப் பிறகு டயாடெம் தனது வாடிக்கையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக, தேவைகளுக்கு தீர்வாக அஷிரா சில்க்ஸ் என்ற பிராண்டை அறிமுகப்படுத்தியது.

தூய்மைக்கு சான்று: அஷிரா புடவைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தரத்தில் சிறந்தவையாக உள்ளன. பெண்களின் தேவை, மகிழ்ச்சியே டயாடெம் நிறுவனத்தின் முன்னுரிமையாகும். தி.நகரில் உள்ள டயாடெம் நிறுவனம் அஷிரா சில்க்ஸை அறிமுகப்படுத்திய ஓர் ஆண்டை கொண்டாடும் இந்த தீபாவளி சீசனில் நேர்த்தியான, அழகான தூய பட்டுப் புடவைகளின் புதிய தொகுப்பை வெளியிடுகிறது. இப்புடவைகளில் உள்ள சில்க் மார்க் சான்றிதழ் லேபிளே இப்பட்டுப் புடவைகளின் தூய்மைக்கு சான்றாகும்.

கதீட்ரல் சாலையில் உள்ள ஷோரூம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அஷிரா சில்க்ஸ் சேலைகள் பிரத்யேகமாக முழு தளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.899 என்ற குறைந்த விலையிலும் புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆச்சி மசாலா உணவுகள் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in