மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மற்றும் ஹெவிவெயிட் பங்குகளான ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி பங்குகளின் வீழ்ச்சி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை (அக்.3) சரிவுடன் தொடங்கின.

ஆரம்ப வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,264.2 புள்ளிகள் சரிந்து 83,002.09 ஆகவும், அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 345.3 புள்ளிகள் சரிந்து 25,451.60 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், லார்சன் அண்ட் டார்போ, ஆக்ஸிஸ் வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி, கோடாக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி பங்குகள் சரிவில் இருந்தன. அதே நேரத்தில் ஜெஎஸ்.டபில்.யு ஸ்டீல், டாடா ஸ்டீல், சன்பார்மா மற்றும் என்டிபிசி பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

இதனிடையே, "செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில், அந்நிய நிறுவங்கள் முதலீடு நிகரமாக ரூ.5,579 கோடியாக இருந்தது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு 70 அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது" என்று மேதா இக்கியுட்டீஸ் லிமிட்-ன் மூத்த துணை தலைவர் (ஆராய்ச்சி) பிரஷாந்த் டாப்ஸ் தெரிவித்தார். காந்தி ஜெயந்தி விடுமுறை காரணமாக புதன்கிழமை பங்குச்சந்தைகள் செயல்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in