

சென்னை: சென்னையில் இன்று (வியாழக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56,880-க்கு விற்பனையாகிறது.
நேற்றைய தினம் பவுனுக்கு ரூ.400 என விலை உயர்ந்திருந்த நிலையில் இரண்டாவது நாளாக தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.56,880-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,110-க்கு விற்பனையாகிறது.