

நெருக்கடியில் சிக்கியுள்ள பூஷண் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து வி.கே. மெஹ்ரோத்ரா விலகிவிட்டார். இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத இயக்குநராக மெஹ்ரோத்ரா செயல்பட்டு வந்தார்.
11 பேரடங்கிய இயக்குநர் குழுவில் இப்போதுதான் முதல் முறையாக ஒரு இயக்குநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சிண்டிகேட் வங்கித் தலைவருக்கு லஞ்சம் அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.
பூஷண் ஸ்டீல் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் குழுவின் இயக்குநர் ஒருவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளது அந்நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.