

இந்தியாவில் குண்டு துளைக்காத கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கான வர்த்தக ஆலோசனை சேவையில் ஈடுபட்டுவரும் ஏடிஎம் டெக்னாலஜீஸ் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஆர்மோரிங் கார்ப்பரேஷன் (ஐ.ஏ.சி) நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் கவச வாகனங்கள் தயாரிப்பில் இன்டர்நேஷனல் ஆர்மோரிங் கார்ப்பரேஷன் நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. இந்நிறுவனம் ஆர்மோர்மேக்ஸ் எனப்படும் காப்புரிமை பெற்ற குறைந்த எடையுள்ள லேமினேட் செய்யப்பட்ட செயற்கை கவச உலோகங்களைப் பயன்படுத்துகிறது.
இவை மோல்டு செய்யப்பட்டு வாகனங்களில் பொறுத்தப்படுகின்றன. வாகனங்கள் மாற்றியமைக்கப்படுவதில்லை. இந்நிறுவனம் 8 ஆயிரம் வாகனங்களில் பொறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இத்தகைய வாகனங்களைத் தயாரிப்பதற்காக ஏடிஎம் டெக்னாலஜீஸ் கூட்டு சேர்ந்துள்ளது.