Published : 27 Jun 2018 08:22 AM
Last Updated : 27 Jun 2018 08:22 AM

இவரை தெரியுமா?- நிதின் பிரசாத்

ஷெல் இந்தியா நிறுவனத்தின் தலைவர். 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

இதற்கு முன்பு ஷெல் லூப்ரிகேண்ட்ஸ் தெற்காசிய செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குநராக இருந்தவர்.

ஆசிய பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விநியோகத்துறை பொது மேலாளர், மேலாண்மை ஆலோசகர், திட்ட தலைவர் என பல பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை அமெரிக்காவில் உள்ள அல்டெரா நிறுவனத்தில் உத்தி சார்ந்த சந்தையிடல் அதிகாரியாக இருந்தவர்.

இன்சியாட் மேலாண்மை பட்டம் பெற்றவர். அட்லாண்டா மாகாணத்தில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நெட்வொர்க்கிங் துறையில் பட்டம் பெற்றுள்ளர்.

பெட்ரோலியம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம், விநியோகம், இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் வல்லுநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x