

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை நேற்று புதிய உச்சம் தொட்டது. நேற்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 85,000 புள்ளிகளைக் கடந்தது. நிப்டி 26 ஆயிரம் தொட்டது.
இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். எனினும், நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சற்று இறக்கம் கண்டது. வர்த்தகமுடிவில் சென்செக்ஸ் 0.02% குறைந்து 84,914 ஆக நிலைபெற்றது. அதேசமயம், நிஃப்டி 0.01%உயர்ந்து 25,940 ஆக நிலைபெற்றது. 12 வாரங்களில் சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளி களிலிருந்து 85 ஆயிரம் புள்ளி களுக்கு உயர்ந்துள்ளது. ஜுலை18-ம் தேதி சென்செக்ஸ் 81,000 புள்ளிகளைத் தொட்டது. ஆகஸ்ட்1-ம் தேதியில் 82,000, செப்டம்பர் 12-ம் தேதியில் 83,000, செப்டம்பர் 20-ம் தேதியில் 84,000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில் தற்போது 85,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது.
நேற்று அதிகபட்சமாக, டாடா ஸ்டீல் 4.25%, ஹிண்டால்கோ 3.95%, பவர் கிரிட் கார்ப் 2.61%, டெக் மஹிந்திரா 1.86%, அதானி எண்டர்பிரைசஸ் 1.64%, ஓஎன்ஜிசி 1.35%, ஹெச்சிஎல் 1.30% என்ற அளவில் ஏற்றம் கண்டன. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் 2.91%, ஹெச்யூஎல் 2.58%, கிராசிம் 1.78, அல்ட்ரா டெக் சிமென்ட் 1.68%, ஸ்ரீராம் பைனான்ஸ் 1.44%, சிப்லா 1.24%, இன்டஸ்இண்ட் 1.15%, நெஸ்ட்லே 1.05%, ஹீரோ மோட்டோகார்ப் 1.04%, கோடக் மஹிந்திரா 1.03% என்ற அளவில் இறக்கம் கண்டன.