Published : 20 Aug 2014 11:34 AM
Last Updated : 20 Aug 2014 11:34 AM

பெங்களூரில் விவசாயக் கண்காட்சி

மாபெரும் விவசாயக் கண்காட்சி பெங்களூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. விவசாயம், வேளாண்மை கருவிகள், பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் உணவுப் பதப்படுத்துதல் உள்பட பல்வேறு விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்த அரங்குகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

இந்தியாவின் பல முன்னணி வேளாண்மை தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, இத்தாலி, துருக்கி, போலந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்களது கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க சர்வதேச அளவில் நடை பெற்று வரும் முயற்சிகள் மற்றும் அனுபவங்களை ஒரே இடத்தில் இருந்து விவசாயிகள் சேகரிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமையும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வானிலை தகவல்கள்

விவசாயிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பான தகவல்கள் www.imdagrimet.gov.in என்ற இணையதளம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. நமது உள்ளூர் அளவிலான வானிலை தொடர்பான பல விவரங்களை இந்த இணையதளம் மூலம் விவசா யிகள் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x