Published : 25 Jun 2018 08:10 AM
Last Updated : 25 Jun 2018 08:10 AM

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் தடை: ரூ.15,000 கோடி நஷ்டம்; 3 லட்சம் பேர் வேலை இழப்பு

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரண மாக ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 3 லட்சம் நபர்கள் வேலை இழந்திருப்பதாகவும் பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளார் நீமித் புனமியா தெரிவித்தார். இந்த சங்கத்தில் 2,500 உறுப்பினர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கு தொழிற்சாலையை மூடுவதை தவிர வேறு வாய்ப்புகள் இல்லை என்றும் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. உற்பத்தி, பயன்படுத்துதல், விற்பனை, விநியோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பாதுகாத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் பை, ஸ்பூன், தட்டு, பாட்டில் மற்றும் தெர்மாகோல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த சனிக்கிழமையுடன் (ஜூன் 23) முடிவுக்கு வந்தது.

இந்த தடையால் வேலை இழப்புகள் மட்டுமல்லாமல், மாநிலத்தின் ஜிடிபியும் பாதிப்படையும். தவிர பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனும் உயரும் என இந்த துறையை சார்ந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தவிர தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், இரண்டாம் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.10,000 அபராத மும் மூன்றாம் முறை பிடிபட்டால் ரூ.25,000 அபராதம் மற்றும் மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருகிறது.

ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு சில விதி விலக்குகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பால், மருத்து பொருட்கள், ஏற்றுமதி செய்வதற்கு தேவையான பைகள், திடக்கழிவுகளை கையாளும் பைகள் போன்றவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x