அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி 6%-க்கு அதிகமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி 6%-க்கு அதிகமாக இருக்கும்: உலக வங்கி தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: உலகின் மிக வேகமான வளர்ச்சி காணும் பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. வேலை வாய்ப்பு சந்தை மேம்பட்டுள்ளது மற்றும் வலுவான சேவை வர்த்தகம் காரணமாக இந்தியா 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்தது.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என முந்தைய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 7 சதவீதத்தை எட்டும் எனஉலக வங்கி உயர்த்தி மதிப்பிட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் வலுவான பொருளாதார வளர்ச்சி வறுமையின் தீவிரத்தன்மையை குறைக்க உதவும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சியானது 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்றும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

பொது உள்கட்டமைப்பு முதலீடு, ரியல் எஸ்டேட் துறை முதலீடு நாட்டில் அதிகரித்துள்ளது. அதேநேரம், உற்பத்தி துறையின் வளர்ச்சியும் 9.9 சதவீதமாக உள்ளது. பின்தங்கியுள்ள விவசாயத்துறையின் வளர்ச்சியை நெகிழ்ச்சியான சேவை துறையின் வளர்ச்சி ஈடு செய்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in