

சென்னை: கோயம்பேடு சந்தையில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி முட்டைகோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. எப்போதும் உச்சத்தில் இருக்கும் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது.
``கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் அதிக அளவில் முட்டைகோஸ் விளைந்துள்ளது. அதனால் வரத்தும் அதிகரித்திருப்பதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அடுத்த ஓரிரு வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளது'' என்று வியாபாரிகள் கூறினர்.