

சீனாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை (எப்டிஏ) மேற் கொள்ள வேண்டும் என்று இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு சம்மேளனம் (எப்ஐஇஓ) வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று சம்மேளனத்தின் தலைவர் ரபீக் அகமது வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனுடன் தாராள வர்த்தக பேச்சுவார்த் தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். சீனாவுடன் தாய்லாந்து தாராள வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டிருக்கும்போது இந்தியா இது குறித்து ஏன் அச்சப்பட வேண்டும் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
உற்பத்தித் துறையினர் சீனாவுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை சீனா வுடனான ஒப்பந்தத்தை எதிர்த்து வரும் நிலையில் எப்ஐஇஓ, இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இரு நாடுகளிடையிலான வர்த்தக பற்றாக்குறையைப் போக்க மருத்துவம், சேவைத் துறை உள்ளிட்டவற்றில் இந்தியாவை அனுமதிக்குமாறு சீனாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.