

சென்னை: சென்னையில் இன்று (புதன் கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,680-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,710-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.92-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்காக தங்கம் வாங்கும் போக்கு அதிகரிக்கும் சூழலில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.