இந்தியாவின் வளர்ச்சி முன்னுதாரணமிக்கது: ரிசர்வ் வங்கி பாராட்டு

இந்தியாவின் வளர்ச்சி முன்னுதாரணமிக்கது: ரிசர்வ் வங்கி பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: “கடந்த 5 ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரும் நிச்சயற்ற சூழல் நிலவியது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் முன்னுதாரணமிக்க வளர்ச்சியைக் கொண்டிருந்தது” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “கரோனாவின்போது சரிந்த இந்திய பொருளாதாரம் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வேகமாக மீண்டெழுந்தது.

போர் காரணமாக ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடையால் வர்த்தக ரீதியில் பல்வேறு சவால்கள் உருவெடுத்தபோதிலும் இந்தியா முன்னுதாரணமிக்க வளர்ச்சியை அடைந்தது” என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in