`வறுமையை ஒழிக்க பன்முக உத்தி தேவை’

`வறுமையை ஒழிக்க பன்முக உத்தி தேவை’
Updated on
1 min read

இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்கு பன்முக உத்தி தேவை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதன் மூலம்தான் வறுமையை ஒழிக்க முடியும் என்று இந்தியாவின் பொதுக் கொள்கை ஆய்வறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரிப்பில் ஓ.பி. ஜின்டால் சர்வதேச பல்கலைக் கழகமும் ஆக்ஸ்போர்டு பல்கலை அச்சகமும் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளன.

இந்தியாவில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கு குறிப் பிட்ட வகையிலான பன்முக உத்திகள் அவசியம். அதாவது அடிப்படையான அணுகுமுறை, மனித உரிமை சார்ந்த அணுகு முறை, இயற்கை வள மேலாண்மை அணுகுமுறை மற்றும் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி ஆகிய வற்றை பின்பற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் புவியியல் ரீதியாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அதிகரித்துவரும் நகர்ப் புறமும் ஒரு காரணமாகும் என்று அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. உணவுப் பொருள் விநியோகம் மட்டுமே வறுமையை ஒழித்துவிடாது என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

வாழ்வாதார வாய்ப்புகள், சமூக வாய்ப்புகள், சட்ட விதி அமலாக்கம், அடிப்படை கட்ட மைப்பு மேம்பாடு உள்ளிட்ட காரணிகள் மூலம் வறுமைக் கோடு தீர்மானிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சிறப்புக் கொள்கை குறியீடு (பிஇஐ) 1981-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in