தங்கம் விலை அதிகரிப்பு: சென்னையில் ஒரு பவுன் ரூ.52,520-க்கு விற்பனை

தங்கம் விலை அதிகரிப்பு: சென்னையில் ஒரு பவுன் ரூ.52,520-க்கு விற்பனை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று (ஆக.16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே உயர்ந்து ஒரு பவுன் ரூ.52,520-க்கு விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்ததில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.

கடந்த வாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்த தங்கத்தின் விலை இன்று (ஆக.16) சற்றே உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.52,520-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனையாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in