Published : 18 May 2018 08:16 AM
Last Updated : 18 May 2018 08:16 AM

இவரை தெரியுமா?: ஜேக்ஸ் அசென்ப்ரோயிச்

வாலியோ (valeo ) வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.

செயின்ட் கோபெய்ன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தின் துணை தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் உடையவர்.

பிரான்ஸ் அரசாங்கத்தின் கேபினெட் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

பிஎன்பி பரிபாஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது பெற்றவர்.

பிரான்ஸ் அரசுக்கு வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

மைன்ஸ் பாரிஸ் டெக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x