Last Updated : 16 Aug, 2014 12:00 AM

 

Published : 16 Aug 2014 12:00 AM
Last Updated : 16 Aug 2014 12:00 AM

நிறுவனங்களுக்கு பொன்னான வாய்ப்பு

நிதி நிலை அறிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யத் தவறிய நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த நல்வாய்ப்பை நிறுவனங்களுக்கான பதிவாளர் துறை அளித்துள்ளது.

நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் ஒரு முறை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த

12-ம் தேதி வெளியான சட்ட தீர்ப்பு திட்டம் குறிப்பிட்டுள்ளது.

ஆண்டு அறிக்கை, நிறுவன நிதி அறிக்கை உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யத் தவறிய நிறுவனங்கள் குறைந்தபட்ச அபராதத் தொகையுடன் செப் டம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுவாக நிறுவனங்கள் அது அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற 60 நாள்களுக்குள் நிறுவன நிதி நிலை அறிக்கை உள்ளிட்ட விவரங்களை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவை மிகவும் முக்கியமான ஆவணங்களாகக் கருதப்படும்.

படிவம் 23பி (பங்கு வெளியீடு செய்திருக்கும் நிறுவனங்களின் ஆண்டு வருமானம்), படிவம் 21ஏ (பங்கு வெளியீடு செய்யாத நிறுவனங்களின் ஆண்டு வருமானம்), படிவம் 23 ஏசி மற்றும் 23ஏசிஏ (நிதி நிலை அறிக்கை – லாபம் மற்றும் நஷ்ட கணக்கு விவரம்), படிவம் 66 (நிறுவன செயலரின் சான்று), படிவம் 23பி (தணிக்கையாளர் நியமனம் குறித்த அறிவிப்பு)

இந்த ஆவணங்களை காலதாம தமாக தாக்கல் செய்தால் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதலாக மிக அதிகமான அபராதத் தொகையுடன் இவை தாக்கல் செய்யப்பட வேண்டும். இவ்விதம் ஆவணங்களை பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவன சட்டம் 2013 குறிப்பிடுகிறது. அத்துடன் அபராதத் தொகை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கையும் கடுமையாக உள்ளது.

இந்த அறிவிப்பானது அறிக்கை தாக்கல் செய்யத் தவறிய நிறுவனங்களுக்கு மிக அரிய வாய்ப்பாகும். வழக்கமான கட்டணத்துடன் 25 சதவீதம் கூடுதலாக செலுத்தி வழக்கு, அபராதங்களிலிருந்து விடுபடலாம்.

மேலும் செயல்படாத நிறு வனங்களும் ஆவணத்தை தாக்கல் செய்வதன் மூலம் தாங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பை இதன்மூலம் பெறலாம். மிகக் குறைந்த அபராதத் தொகையை செலுத்தி செயல் படாத நிறுவனங்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.

இந்தத் திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அக்டோபர் 14, 2014 வரை அமலில் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x