தமிழகத்தில் 9,000-ஐ தாண்டிய புத்தொழில் நிறுவனங்கள்

தமிழகத்தில் 9,000-ஐ தாண்டிய புத்தொழில் நிறுவனங்கள்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் இலக்கை நோக்கி தமிழக அரசு பயணித்து வருகிறது. இதை முன்னிட்டு, பல்வேறு நடவடிக்கைகள் தொழில்துறை, குறுசிறு நடுத்தரத் தொழில்கள்துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, குறு சிறு நடுத்தரத் தொழில்கள் துறை சார்பில் புத்தாக்க நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டு மானியம், கடனுதவி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றின் காரணமாக, 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2032-ஆக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் தற்போது 9,038 புத்தொழில் நிறுவனங்கள்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7,006 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மகளிரால் தற்போது 4,446 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in