Published : 12 May 2018 08:21 AM
Last Updated : 12 May 2018 08:21 AM

இவரை தெரியுமா?: கார்லோஸ் ரோட்ரிக்ஸ்

ஏடிபி மனித வள மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

வின்காம் மனித வள மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் உடையவர்.

அமெரிக்க தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பான பிஸினஸ் ரவுண்ட்டேபிளின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

ஏடிபி நிறுவனம் பிற நிறுவனங்களுக்கு அளித்துவரும் ஊழியர் சம்பள சேவை, ஓய்வூதிய சேவை போன்றவற்றை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர்.

சமூக, பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் நியூயார்க் எக்கனாமிக் கிளப்பின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

நரம்பு மண்டல நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற உதவும் ஏ-டி தொண்டு அமைப்பின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிகவியல் நிர்வாகத்தில் மேலாண்மைப் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x