ஸ்டார்ட்அப் எண்ணிக்கை 1.4 லட்சத்தை தாண்டியது: மத்திய அரசு தகவல்

ஸ்டார்ட்அப் எண்ணிக்கை 1.4 லட்சத்தை தாண்டியது: மத்திய அரசு தகவல்

Published on

புதுடெல்லி: ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 1.4 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் 2016-ம் ஆண்டில் 400 ஸ்டார்ட்அப் நிறுவனங்களே இருந்தன. தற்போது அந்தஎண்ணிக்கை 1.4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத் மாநிலங்களவையில் சமீபத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் “அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 25,044 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. 15,019 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்டு2-வது இடத்தில் கர்நாடகாவும், 14,734 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்டு 3-வது இடத்தில் டெல்லியும் உள்ளன. 4-வது இடத்தில் உத்தர பிரதேசம் (13,299), 5-வது இடத்தில் குஜராத் (11,436) உள்ளன.

மத்திய அரசு 2016-ம் ஆண்டுஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தைக் கொண்டுவந்தது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையங்கள், ரூ.10 ஆயிரம் கோடி நிதிஉள்ளிட்ட திட்டங்களை மத்தியஅரசு முன்னெடுத்தது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளை சார்ந்திருப்பதைக் குறைத்து உள்நாட்டு முதலீடுகளைக் கிடைக்க செய்யும் வகையில் பல்வேறு கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதன்காரணமாக இந்தியாவில் ஸ்டார்ட் அப் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in