

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) இந்தியாவில் பொருளாதார மாநாட்டை நடத்த உள்ளது. இந்தியத் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு நவம்பர் மாதம் 4ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதிய தொடக்கத்துக்கு அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்பு என்பது இந்த மாநாட்டின் பிரதான கருத்தாக அமையும். ஷோபனா பார்தியா, ஆனந்த் மஹிந்திரா, எதியாட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன், மிட்சுபிஷி தலைவர் யோரிஹிகோ கொஜிமா உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்துறையில் வெளிப்படைத் தன்மை, உள்ளிட் டவை இம்மாநாட்டின் பிரதானமாக விவாதிக்கப்பட உள்ளன.
பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமையும் துறைகளை முடுக்கிவிட இந்த மாநாடு உதவியாக இருக்கும் என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.