Published : 09 May 2018 08:33 AM
Last Updated : 09 May 2018 08:33 AM

இவரை தெரியுமா? டேவிட் எம் ரூபன்ஸ்டைன்

உலக அளவில் மிகப் பெரிய தனியார் நிதிச் சேவை மற்றும் முதலீட்டு நிறுவனமான கார்லைல் நிறுவனத்தின் இணை நிறுவனர். இதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார். 1987-ம் ஆண் டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

1973-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை அமெரிக்க அரசின் நீதித்துறை கமிட்டி துணைக்குழுவில் செயல்பட்டவர்.

சிகாகோ பல்கலைக் கழகம், ஜான் எப் கென்னடி மையத்தின் தலைவர் மற் றும் காப்பாளர், புரூக்கிங் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் என பொறுப்புகளில் உள்ளார்.

அதிபரின் பொருளாதார ஆலோசனைக் குழு, அமெரிக்க தொழில் குழு, ஹார்ட்வேர்டு பல்கலைக் கழக ஆலோசனைக் குழு, உலக பொருளாதார மையம் உள்ளிட்டவற்றில் செயல்பட்டு வருகிறார்.

1973-ம் ஆண்டு சிகாகோ சட்டப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். நிறுவனம் 17,400 கோடி டாலரை நிர்வகிக்கிறது. இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 280 கோடி டாலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x