

சிறிய வங்கிகள் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இத்தகைய வங்கிகள் தொடங்க 100 நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக அசோசேம் தெரிவித்துள்ளது. இவற்றில் சில வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியனவும் அடங்கும்.
இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் இறுதி வழிகாட்டு தலுக்காகக் காத்திருக்கின்றன. அனைவருக்கும் நிதிச் சேவை கிடைக்கச் செய்வதற்காக சிறிய வங்கிகள் தொடங்க அனும திக்கப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த மாதம் தனது பட்ஜெட் உரையில் பேமென்ட் வங்கிகள் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து ஒரு வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது.
இத்தகைய வங்கிகளை தொழில் நிறுவனங்கள் அமைந் துள்ள தொழிற்பேட்டையில் அமைக்கலாமா நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கலாமா அல்லது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அமைக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா? என்பது போன்ற விவரங்களை நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுள்ளன.