‘பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட...’ - உணவு பரிந்துரைக்க உதவும் ஸ்விகியின் ‘ஈட்லிஸ்ட்’ அம்சம்

பிரதிநிததுவப் படம்
பிரதிநிததுவப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: ஒரே உணவை உண்டு சலிப்பு கொண்டவர்கள், புதிய உணவு வகையை ருசிக்க வேண்டும் என விரும்பும் தங்கள் பயனர்களை கவரும் நோக்கில் ‘ஈட்லிஸ்ட்’ என்ற அம்சத்தை ஸ்விகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் நினைத்த நேரத்தில் உணவுகளை ஆர்டர் செய்து, ருசிக்க அனுமதிக்கிறது ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள். இந்த சூழலில் ‘ஈட்லிஸ்ட்’ அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது ஸ்விகி. இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஸ்விகியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஈட்லிஸ்ட் அம்சம் உலக அளவில் இந்த தொழில் சார்ந்து இயங்கி வரும் நிறுவனங்களில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை லிஸ்ட் செய்யவும், மற்ற பயனர்களின் லிஸ்டை பார்க்கவும் முடியும்.

ஸ்விகியின் ஆப் இன்சைட் தரவுகளின் படி 58 சதவீத பயனர்களுக்கு உணவு ஆர்டர் செய்ய உதவி தேவைப்படுவதாகவும், கூடுதலாக 68 சதவீத பயனர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிந்துரையை ஏற்று ஆர்டர் செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இதோடு உணவு சார்ந்து ரிவ்யூ தளங்களுக்கு சென்று அதை பார்த்து ஆர்டர் செய்யும் வழக்கமும் பயனர்களுக்கு உண்டு என சொல்கிறது.

இந்த நடைமுறையை எளிதாக்கும் நோக்கில் தங்கள் செயலிக்குள் ஈட்லிஸ்ட் அம்சம் மூலம் அதனை சேர்த்துள்ளது ஸ்விகி. மேலும், புதிய உணவை ருசிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தும் அதன் சுவை அறியாத காரணத்தால் வழக்கமாக ஆர்டர் செய்யும் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் நோக்கில் இதனை ஸ்விகி அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது.

அதோடு, இதில் பயனர்கள் தனித்தனியாக ஈட்லிஸ்ட் கிரியேட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்தவர்களுடன் பகிரவும் முடியும். பயனரின் ஸ்விகி முகப்பு பக்கத்தில் இந்த அம்சம் இருக்கும். தங்களுக்கு பிடித்த உணவுகளில் உள்ள புக்மார்க்கை தேர்வு செய்து அதனை லிஸ்ட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புது புது உணவுகளை பயனர்கள் ருசிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in