

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்காவுக்கு ரூ.8.2 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசாக கொடுத்திருக்கிறது இன்போசிஸ் நிறுவனம். பாம்பே பங்குச்சந்தைக்கு கொடுக் கப்பட்ட தகவலில் இது தெரிய வந்திருக்கிறது.
22,794 பங்குகள் விஷால் சிக்காவுக்கு வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் இன்போசிஸின் ஒரு பங்கு 3601 ரூபாயில் முடிந்தது. இந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு ரூ. 8,20,81,194.
அடுத்த 4 வருடங்களுக்கு விஷால் சிக்கா தொடர்ந்து இன்போசிஸில் இருந்தால் மட்டுமே இந்த பங்குகளுக்கு அவர் உரிமை கோர முடியும்.
இவரது ஆண்டு வருமானம் (மாறுபடும் ஊதியத்தையும் சேர்த்து) 30 கோடி ரூபாய்.