Published : 19 May 2018 08:27 AM
Last Updated : 19 May 2018 08:27 AM

ஒன் பிளஸ் 6 அறிமுகம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட் போன் நேற்று முன் தினம் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. உள்ளரங்கில் ஆயிரக் கணக்கான ஒன் பிளஸ் ஆர்வலர்களின் மத்தியில் இந்த ஸ்மார்ட் போனை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான நடிகர் அமிதாப் பச்சன் அறிமுகம் செய்தார்.

ஒன்பிளஸ் 5 டி ஸ்மார்ட் போன் வெற்றியைத் தொடர்ந்து இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 ஜிபி ராம், 64 ஜிபி நினைவகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 34,999 ஆகும். இதில் 8 ஜிபி ராம், 128 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட் போன் விலை ரூ. 39, 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போனை வாங்க விரும்புவோர் அமேசானில் ஆன்லைன் மூலம் வாங்கலாம். அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அன்றைய தினமே இந்த போன் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x