Published : 06 May 2018 11:00 AM
Last Updated : 06 May 2018 11:00 AM

வாட்ஸ் ஆப் புதிய சிஇஓ நீரஜ் அரோரா?

வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் ஜான் கோம் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நீரஜ் அரோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான நீரஜ் அரோரா வாட்ஸ் ஆப் நிறுவனம் ஃபேஸ்புக்குடன் இணைக்கப்படுவதற்கு முன்பிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வாட்ஸ் ஆப்பில் பணிபுரிந்து வருகிறார்.

பேடிஎம் நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினராக இரண்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உடையவர். கூகுள், டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெட் மற்றும் அசெல்லியன் போன்ற நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

டெல்லி ஐஐடியில் இயந்திரப் பொறியியல் பட்டமும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் பைனான்ஸ் துறையில் மேலாண்மைப் பட்டமும் பெற்றுள்ள இவருக்கு 39 வயதாகிறது.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்திருப்பதன் காரணமாக வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நீரஜ் அரோரா நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக தனிநபர் தகவல்களை பயன்படுத்துவது தொடர் பாக ஜான் கோமுக்கும், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஜான் கோம் விலகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x