நோயல் டாடா - இவரைத் தெரியுமா?

நோயல் டாடா - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

$ டாடா குழுமத்தின் ரீடெய்ல் நிறுவனமான டிரென்ட் நிறுவனத்தின் தலைவர். டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மைத்துனர்.

$ 1999ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். 2010ம் ஆண்டு துணைத்தலைவராக பதவி உயர்த்தப்பட்ட இவர் இப்போது தலைவராகி இருக்கிறார்.

$ இவர் டாடா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் கூட.

$ சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், இன்சியாட் நிர்வாகப் பயிற்சியும் பெற்றவர்.

$ டாடா குழும நிறுவனங்களான வோல்டாஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கிறார். மேலும் சிஐஐ, மும்பை தொழில் வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகளிலும் முக்கியமான பொறுப்புகள் வகிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in