Published : 23 May 2018 09:13 AM
Last Updated : 23 May 2018 09:13 AM

இவரை தெரியுமா?: நிக்கோலஸ் ரோஹடின்

இங்கிலாந்தை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ரோஹடின் நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாகவும் உள்ளார். 2002-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஜே.பி.மார்கன் நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தலைமை நிர்வாகக் குழுவில் இருந்தவர்.

வளரும் சந்தை, அந்நிய செலாவணி, கமாடிட்டி, கடன் சந்தை மற்றும் இ-காமர்ஸ் சந்தையில் முதலீடுகளை செய்து வருகிறார். 40 நாடுகளில் முதலீடு செய்துள்ளார்.

எமர்ஜிங் மார்க்கெட் டிரேடர்ஸ் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர். ஆசிய சமூகம் மற்றும் எமர்ஜிங் மார்க்கெட் பிரைவேட் ஈக்விட்டி கூட்டமைப்பின் இயக்குநர் குழுவில் உள்ளார்.

ஜே.பி.மார்கன் ஆசியன் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியுள்ளார்.

பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x