

இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக அந்நிய நேரடி முதலீடு 85% குறைந்திருக்கிறது.
கடந்த 2013 ஏப்ரல் மே மாதத்தில் இந்திய ஆட்டோ துறையில் 47.8 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்தது. ஆனால் இப்போது 85 % குறைந்து 7.3 கோடி டாலராக இருக்கிறது. இந்த துறை இன்னும் சிக்கலில்தான் இருக்கிறது. தற்போது உள்ள உற்பத்தி திறனை கடந்த இரண்டு வருடங்களாக முழுமையாக எட்டவில்லை என்று இந்த துறையில் இருக்கும் வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.
கார் விற்பனை தொடர்ந்து இரண்டாவது நிதி ஆண்டாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ துறை மட்டுமல் லாமல் பார்மா துறையில் அந்நிய நேரடி முதலீடு குறைந்திருக்கிறது.அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப் பதற்காக அரசாங்கம் பல நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. 2013-14ம் நிதி ஆண்டில் 2,429 கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்தது.