

சென்னை: சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம்விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன்ரூ.50 ஆயிரம் என்ற வரலாறுகாணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது.
நேற்று பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.54,400 என்ற விலையிலும், கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.6,800 என்ற விலையிலும் விற்பனையானது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.58,160-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80உயர்ந்து, ஒரு கிராம் ரூ.98 ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோரூ.98,000 ஆகவும் இருந்தது.