Published : 23 May 2024 12:20 AM
Last Updated : 23 May 2024 12:20 AM

டெல்லியில் நடைபெறும் 71-வது இந்திய சர்வதேச ஆடை கண்காட்சி: திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

திருப்பூர்: 71-வது இந்திய சர்வதேச ஆடை கண்காட்சி மற்றும் நிலைத்தன்மை குறித்த ஏடிடிசியின் புதிய முயற்சிகள் குறித்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

வரும் ஜூன் மாதம் டெல்லியில் நடைபெறும் 71-வது இந்திய சர்வதேச ஆடை கண்காட்சி மற்றும் நிலைத்தன்மை குறித்த ஏடிடிசியின் புதிய முயற்சிகள் குறித்து கலந்துரையாடல் கூட்டத்துக்கு, ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தின் (ஏடிடிசி) மூத்த துணைத்தலைவர் ராகேஷ் வைத் பங்கேற்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் வி.இளங்கோவன், பொதுச்செயலாளர் என்.திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஆயத்த ஆடை அபிவிருத்தி கழகம் (ஏஇபிசி) துணைத்தலைவர் ஆர்.ராமு, சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் பிபிகே. பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராகேஷ் வைத்துக்கு திருப்பூர் மற்றும் பின்னலாடை தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் சமூக நிர்வாகம் குறித்து சங்க நிர்வாகம் மேற்கொண்ட செயல்பாடுகள் தொடர்பாக காணொலி வாயிலாக விளக்கப்பட்டது. இதனை அவர் பாராட்டினார். தொடர்ந்து திருப்பூர் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த முன்மொழிய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஜவுளி மற்றும் ஆடைத்துறையில் நிலைத்தன்மையின் பரிமாணங்கள், நிலத்தன்மைக்கான நடைமுறைப்படுத்தல், ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் மேற்கொண்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள், பிராண்டுகளின் கட்டமைப்பு, ஏற்றுமதியாளர்கள் நிலைத்தன்மை குறித்த பிராண்டுகளின் தேவையை பூர்த்தி செய்வதன் முக்கியத்துவம், ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில்முறை மேம்படுத்துதல், பெண் பணியாளர்களுக்கு நிதி கல்வியறிவு பயிற்சியை தொடர்ந்து, அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பெருமிதம் தெரிவித்தார்.

3500 வாங்குவோர் பங்கேற்கும் 71-வது இந்திய சர்வதேச ஆடை கண்காட்சியில் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விமான போக்குவரத்து செலவினை ரூ.10 ஆயிரம் வரை, இந்திய சர்வதேச ஆடை கண்காட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x