Published : 16 Aug 2014 12:15 PM
Last Updated : 16 Aug 2014 12:15 PM

மனோஜ் கோஹ்லி: இவரைத் தெரியுமா?

• பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். பார்தி குழுமத்தில் டெலிகாம் தவிர்த்த மற்ற துறைகள் இவரது பொறுப்பின் கீழ் வரும்.

• இதற்கு முன்பு பார்தி ஏர்டெல் (சர்வதேச பிரிவு) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். 19 நாடுகளுக்கு பொறுப்பேற்றவர்.

• 2002-ம் ஆண்டு பார்தி குழுமத்தில் இணைந்த இவர் பல முக்கிய பொறுப்புகளை கையாண்டவர்.

• 1979-ம் ஆண்டு ஸ்ரீராம் குழுமத்தில் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்தவர். அந்த குழுமத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் அங்கு 15 வருடங்கள் பணியாற்றினார்.

• பார்தி குழுமத்துக்கு வரும் முன்பு எஸ்காடெல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் சி.இ.ஓவாக ஐந்து வருடங்கள் இருந்தார்.

• வணிகம் மற்றும் சட்டம் படித்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தவர். சிஐஐ, சிஓஏஐ. உள்ளிட்ட பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x