Published : 16 May 2024 12:57 PM
Last Updated : 16 May 2024 12:57 PM

விளம்பரத்தால் வந்த வினை: பயனர்களிடம் வருத்தம் தெரிவித்த Bumble டேட்டிங் செயலி

கோப்புப்படம்

ஆஸ்டின்: உலக அளவில் பயன்பாட்டில் உள்ள டேட்டிங் செயலிகளில் ஒன்று Bumble. அண்மையில் பிரம்மச்சரியம் குறித்த அந்நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று வெளியாகி அது வினையாகி போனது. அது சார்ந்து பயனர்கள் தங்களது எதிர்ப்புக் குரலை எழுப்பிய நிலையில் அதற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ல் அறிமுகமானது. ஒவ்வொரு மாதமும் சுமார் 4 கோடி பயனர்களுக்கும் மேலானவர்கள் இந்த செயலியை ஆக்டிவாக பயன்படுத்தி வரும் பயனர்களாக உள்ளனர். உலக அளவில் பிரபலமாக உள்ள டேட்டிங் செயலிகளில் ஒன்று.

இந்த சூழலில் கன்னியாஸ்திரிகள் மற்றும் பிரம்மச்சரியத்தை பின்பற்றி வரும் நபர்களை சாடும் வகையில் விளம்பரத்தை வெளியிட்டது அந்நிறுவனம். இது வீடியோ வடிவிலும் வெளியானது. இது பயனர்களை கொதிப்படைய செய்தது. அதோடு இது போன்ற செயலுக்கு பதிலாக பயனரின் நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் வைக்கலாம் என சொல்லி இருந்தனர்.

பெரும்பாலானவர்கள் இந்த செயலியில் தாங்கள் எதிர்கொண்டு வரும் சங்கடங்களை பட்டியலிட்டு இருந்தனர். பெண்கள் பாதுகாப்பு, போலி ஃப்ரொபைல், பார்ட்னரின் வன்முறை என பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம் என தெரிவித்தனர்.

நாங்கள் தவறு செய்து விட்டோம். மாடர்ன் டேட்டிங் சார்ந்த விவகாரத்தில் விரக்தி கொண்டவர்களை ஈர்க்கும் வகையில் ‘செலபசி’ (Celibacy) சார்ந்த விளம்பரத்தை வெளியிட்டோம். ஆனால், அது எதிர்மறையாக அமைந்துவிட்டது என அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் ஆண்களுடனான உரையாடலைத் தொடங்கவும், கட்டுப்படுத்துவதற்குமான அனுமதியை பெண் பயனர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி இருந்தது. ஆனால், அண்மையில் அந்த அம்சத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x