Published : 04 Apr 2018 09:44 AM
Last Updated : 04 Apr 2018 09:44 AM

இவரை தெரியுமா?: பங்கஜ் மிட்டல்

ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 2001-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் உள்ளார்.

1990-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் சந்தையிடுதல் பிரிவில் இணைந்தார். 1997-ம் ஆண்டில் அந்த துறையின் தலைவராக உயர்ந்தார்.

வயர் மூலமான கட்டுப்பாட்டு கருவியை அறிமுகம் செய்தவர். மதர்சன் சுமி நிறுவனத்தின் ஐரோப்பிய சந்தையை உருவாக்கியவர்.

தற்போது நிறுவனம் 36 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 86 சதவீத வருமானம் இந்தியாவுக்கு வெளியே உள்ள நுகர்வோரிடமிருந்து வருகிறது.

வர்த்தக வாகனத் துறை உதிரிபாக நிறுவனமான பிகேஜி நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். மதர்சன் இன்ஜினியரிங் ரிசர்ச், சாக்ஸ் அன்சிலரீஸ் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உள்ளார்.

இளநிலை அறிவியல் பட்டம், மேலாண்மை உயர்கல்வியும் முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x