அட்சய திருதியை 2024: சென்னையில் தங்கம் விலை உயர்வு

அட்சய திருதியை 2024: சென்னையில் தங்கம் விலை உயர்வு
Updated on
1 min read

சென்னை: அட்சய திருதியை ஒட்டி சென்னையில் இன்று (10.5.2024) ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக காலை 7 மணி முதலே நகைக்கடைகள் பல வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்து திறக்கப்பட்டன.

வழக்கமாக காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தங்கம் விலை தொடர்பான அறிவிப்பை தங்க வணிகர்கள் கூட்டமைப்பு வெளியிடும். ஆனால் அட்சய திருதியை என்பதால் இன்று காலை 7 மணியளவிலேயே தங்கம் விலை நிலவரம் வெளியானது. அப்போது 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6660 ஆக இருந்தது. பவுனுக்கு ரூ.53,280க்கு விற்பனையானது.

இந்நிலையில் காலை 8.30 மணியளவில் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6705 என்றும் பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு பவுன் ரூ.536,40 என்றளவிலும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ,90-க்கு விற்பனையாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in